NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021, Registrar காலியிடங்கள்

NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 | Registrar & Deputy Registrar | மொத்தம் 03 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.03.2021

புதிய NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021: National Institute of Technology (NIT) Tiruchirappalli, தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Registrar மற்றும் Deputy Registrar பணிகளுக்கான காலியிடங்களை Deputation முறையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிகளுக்கு மொத்தம் 03 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 24.02.2021 அன்று முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 26.03.2021. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவஞ்சல் அல்லது பதிவஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.04.2021.

NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் National Institute of Technology (NIT)
விளம்பர எண் NITT/ R/ Deputn/ 2021/ 01
பணிகள் Registrar & Deputy Registrar
காலியிடங்கள் 03
பணியிடம் திருச்சி
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 24.02.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 26.03.2021
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 05.04.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் nitt.edu

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு/ நேர்காணலின் போது அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் ஒரு ஆண்டு காலம் பணி அமர்த்தப்படுவார்கள். நேர்காணலுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும். இது போன்ற மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்களது இணையதளத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

NIT திருச்சி காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Registrar 01
Deputy Registrar 02
மொத்த காலியிடங்கள் 03

திருச்சி NIT காலியிடங்களுக்கான தகுதிகள்:

கல்வித் தகுதி:

  • ஏதாவது ஒரு துறையில் 55 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • Registrar பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 56 ஆண்டுகள்.
  • Deputy Registrar பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 50 ஆண்டுகள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல்

ஊதிய விவரம்:

  • Registrar: ரூ. 3740- 67000 மற்றும் Grade Pay ரூ. 10000
  • Deputy Registrar: ரூ.15600 – 39100 + Grade Pay ரூ. 7600

திருச்சி NIT வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • nitt.edu என்ற NIT திருச்சி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் Advertisement for the recruitment to the Senior Administrative Positions – Registrar and Deputy Registrar (on deputation), March 26, 2021 என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை நன்றாக படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணையம் வழியாக விண்ணப்பங்களை 24.02.2021 அன்று முதல் சமர்ப்பிக்கலாம்.
  • ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2021.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கீழ்கண்ட முகவரிக்கு விரைவஞ்சல் அல்லது பதிவஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: The Registrar i/c, National Institute of Technology, Tiruchirappalli, Tamil Nadu – 620 015.
  • விண்ணப்பங்களை கடைசி தேதியான 05.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
  • மேலும் விவரங்களுக்கு NIT திருச்சி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes