SERC சென்னை வேலைவாய்ப்பு 2021, JSA & Driver காலியிடங்கள்

SERC சென்னை வேலைவாய்ப்பு 2021 | Driver & Technician | மொத்தம் 14 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.03.2021

புதிய SERC சென்னை வேலைவாய்ப்பு 2021: CSIR – Structural Engineering Research Centre, தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  Junior Secretariat Assistant, Driver மற்றும் Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு மொத்தம் 14 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் CSIR- SERC வலைத்தளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு தகுதி உடையவர்கள் என்றால் ஒவ்வொரு பணிக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 19.03.2021.

SERC சென்னை வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் CSIR – Structural Engineering Research Centre
பணிகள் Junior Secretariat Assistant, Driver & Technician
காலியிடங்கள் 14
ஊதிய விவரம் ரூ. 19,900 – 63,200/-
பணியிடம் சென்னை
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 19.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் serc.res.in

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து அந்த விண்ணப்ப படிவத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து எந்த பதவிக்கான விண்ணப்பம் என்பதை உறையின் மேல் எழுதி விண்ணப்பங்களை 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது போன்ற மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனே தெரிந்துக்கொள்ள எங்களது வலைதளத்தை பின்பற்றுங்கள். விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

SERC சென்னை காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Junior Secretariat Assistant (General, F & A, S& P) 08
Driver 02
Technician (SMSL, BKMD, TTRS, EW&S) 04
மொத்த காலியிடங்கள் 14

SERC சென்னை காலியிடங்களுக்கான தகுதிகள்:

தகுதிகள்:

  • Junior Secretariat Assistant பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • Driver பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV மற்றும் HMV வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Technician பணிக்கு அறிவியல் பாடத்தை கொண்டு 55 சதவீத தேர்ச்சியுடன் SSC/ பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறைகளில் ITI சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • Junior Secretariat Assistant: UR பிரிவினருக்கு அதிகபட்ச வயது 28 ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது 31 மற்றும் SC பிரிவினருக்கு அதிகபட்ச வயது 33 ஆண்டுகள்.
  • Driver: UR பிரிவினருக்கு அதிகபட்ச வயது 27 ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • Technician: UR பிரிவினருக்கு அதிகபட்ச வயது 28 ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுகள் மற்றும் SC பிரிவினருக்கு அதிகபட்ச வயது 33 ஆண்டுகள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • JSA: Type Writing test on Computer & Written Test
  • Driver: Trade Test & Written Test
  • Technician: Skill Test & Written Test

CSIR- SERC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • serc.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் முகப்பு பக்கத்தில் Recruitment to the posts of Junior Secretariat Assistant, Driver & Technician (1) – Adv. No, SE-1/2021 எனத் தொடங்கும் அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் Apply Online என்பதை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: The Controller of Examination, CSIR – Structural Engineering Research Centre, CSIR Campus, Post Bag No. 8287, CSIR Road, Taramani, Chennai – 600113.
  • ஆன்லைன் விண்ணப்பங்களை கடைசி தேதி 19.03.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டண விவரம்:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும்.
  • SC/ ST/ PWD/ Women/ CSIR Employees விண்ணப்பதாரர்களுக்கு கட்டணங்கள் இல்லை.
  • கட்டணங்களை Net Banking மூலம் செலுத்த வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் கட்டண விவரம் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
ஆன்லைன் விண்ணப்ப படிவம் விண்ணப்பிக்க>>>
  • மேலும் விவரங்களுக்கு CSIR அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes