RBI வேலைவாய்ப்பு 2021, 841 காலியிடங்கள்

RBI வேலைவாய்ப்பு 2021 | Office Attendant | மொத்தம் 841 காலியிடங்கள் | கடைசி தேதி: 15.03.2021

புதிய RBI வேலைவாய்ப்பு 2021: Reserve Bank of India (இந்திய ரிசர்வ் வங்கி), வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Office Attendant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்த பணிக்கு மொத்தம் 841 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. RBI சென்னை அலுவலகத்தில் மொத்தம் 71 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. RBI ஆட்சேர்ப்பு செய்திகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் RBI இணையதளத்தின் வழியாக 24.02.2021 அன்று முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2021.

RBI Grade – A மற்றும் Grade – B பணிகளுக்கு விண்ணப்பிக்க>>>

RBI வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் Reserve Bank of India
பணி Office Attendant
காலியிடங்கள் 841 (சென்னை – 71)
பணியிடம் இந்தியா முழுவதும் (குறிப்பாக சென்னை)
ஊதிய விவரம் ரூ. 10940 – 23700/-
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 24.02.2021
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் 09.04.2021 & 10.04.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் rbi.org.in

விண்ணப்பதாரர்களுக்கான ஆன்லைன் தேர்வு வெவ்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய SC/ST/OBC/PwBD விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் முன் தேர்வு பயிற்சி இலவசமாக நடத்தப்படும். தகுதி உள்ள RBI வங்கி பணியாளர்களும் இப்பணிக்கு விண்ணப்பக்கலாம். அரசு நிறுவனங்களில் பணியாற்றி கொண்டு இருக்கும் விண்ணப்பதாரர்கள் NOC சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இது போன்ற மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகளை எங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம்.  விண்ணப்பிக்க தேவையான கல்வி மற்றும் வயது தகுதி போன்ற தகவல்களை கீழே கொடுத்துள்ளோம்.

இந்திய ரிசர்வ் வங்கி காலியிடங்களுக்கான தகுதிகள்:

தகுதிகள்:

  • பத்தாம் வகுப்பு (SSC/ மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டதாரியாக (1.02.2021 தேதியின் படி) இருக்க வேண்டும்.
  • சம்மந்தப்பட்ட மொழிகளில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 25 ஆண்டுகள்.
  • SC/ ST விண்ணப்பத்தாரர்களுக்கு வயது தளர்வு 5 ஆண்டுகள் அளிக்கப்படும்.
  • OBC விண்ணப்பத்தாரர்களுக்கு வயது தளர்வு 3 ஆண்டுகள் அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • Competitive Test (Online Test)
  • Language Proficiency Test (in Regional Language)

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • rbi.org.in என்ற RBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் Opportunities@RBI>>Current Vacancies>>Vacancies என்பதை கிளிக் செய்து Recruitment for the post of Office Attendants – 2020 என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • இணையம் வழியாக விண்ணப்பத்தை 24.02.2021 அன்று முதல் சமர்ப்பிக்கலாம்.
  • ONLINE Application Form என்பதை தேர்வு செய்து ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • விண்ணப்பத்தை கடைசி தேதி 15.03.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்கவும்.

கட்டண விவரம்:

  • SC/ST/PwBD/EXS விண்ணப்பதாரர்கள் ரூ. 50/- Intimation கட்டணம் செலுத்த வேண்டும்.
  • OBC/EWS/General candidates விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் Intimation கட்டணம் ரூ. 450/- செலுத்த வேண்டும்.
  • Staff candidates இந்த கட்டணங்களை செலுத்த தேவையில்லை.
  • கட்டணங்களை Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets மூலம் செலுத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
ஆன்லைன் விண்ணப்ப படிவம் விண்ணப்பிக்க>>>
  • மேலும் விவரங்களுக்கு RBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

RBI வேலைவாய்ப்பு 2021 | Manager & Assistant Manager | மொத்தம் 29 காலியிடங்கள் | கடைசி தேதி: 10.03.2021

புதிய RBI வேலைவாய்ப்பு 2021: Reserve Bank of India (இந்திய ரிசர்வ் வங்கி), தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு (2A / 2020-21) ஒன்றை வெளியிட்டுள்ளது. Manager, Assistant Manager மற்றும் Legal Officer (Grade-B) பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு மொத்தம் 29 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு RBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். RBI Grade – A மற்றும் Grade – B வேலைவாய்ப்பினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த RBI ஆட்சேர்ப்பு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2021.

RBI வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் Reserve Bank of India
விளம்பர எண் 2A / 2020-21
பணிகள் Manager, Assistant Manager & Legal Officer (Grade-B)
காலியிடங்கள் 29
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 23.02.2021
 தேர்வு நடைபெறும் நாள் 10.04.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் rbi.org.in

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), இந்தியாவில் 1935இல் தொடங்கப்பட்ட மத்திய வங்கியாகும். நாட்டின் நாணயத்தை வெளியிடுவதோடு, பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. விண்ணப்பிக்க தேவையான கல்வி மற்றும் வயது தகுதி போன்ற தகவல்களை கீழே கொடுத்துள்ளோம்.

RBI 2021 காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Manager (Technical – Civil) 01
Assistant Manager (Protocol & Security) 05
Assistant Manager (Rajbhasha) 12
Legal Officer (Grade-B) 11
மொத்த காலியிடங்கள் 29

இந்திய ரிசர்வ் வங்கி காலியிடங்களுக்கான தகுதிகள்:

கல்வித் தகுதி:

  • Legal Officer பணிக்கு UGC மற்றும் Bar Council of India ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் / கல்லூரி / நிறுவனத்திலிருந்து சட்டத்தில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Manager பணிக்கு Civil Engineering இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant Manager பணிக்கு சம்மந்தப்பட்ட மொழிகளில் இரண்டாம் நிலை தேர்ச்சியில், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • Legal Officer பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள், அதிகபட்ச வயது 32 ஆண்டுகள்.
  • Manager பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள், அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள், அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்

ஊதிய விவரம்:

  • Assistant Manager: ரூ. 28,150 – 55,600/-
  • Manager & Legal Officer: ரூ. 35,150 – 62,400/-

RBI வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் Opportunities@RBI>>Current Vacancies>>Vacancies என்பதை கிளிக் செய்து Recruitment for the post of Non-CSG – PY 2020 என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • Online Application என்பதை தேர்வு செய்து விண்ணப்பிக்க தொடங்கவும்.
  • தேர்வுக்கான மையத்தை ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் தேர்வு செய்து சமர்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.03.2021.

கட்டண விவரம்:

  • SC/ ST விண்ணப்பதாரர்கள் Intimation கட்டணம் ரூ. 100/- செலுத்த வேண்டும்.
  • GEN / OBC / PwBD/ EWS விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் மற்றும் Intimation கட்டணம் ரூ. 600/- செலுத்த வேண்டும்.
  • RBI Staff விண்ணப்பதாரர்களுக்கு கட்டணங்கள் இல்லை.
  • கட்டணங்களை Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets வழியாக செலுத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
ஆன்லைன் விண்ணப்ப படிவம் விண்ணப்பிக்க>>>

1 thought on “RBI வேலைவாய்ப்பு 2021, 841 காலியிடங்கள்”

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes