CASFOS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021, புதிய காலியிடங்கள்

CASFOS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 | Sports Officer & Accountant | மொத்தம் 05 காலியிடங்கள் | கடைசி தேதி: வேலைவாய்ப்பு செய்தி வெளியான 60 நாட்களுக்குள்

புதிய CASFOS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு: Directorate of Forest Education தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது வன கல்வி இயக்குநரகத்தில் இருக்கும் காலியிடங்களை Deputation முறையில் நிரப்பிட உள்ளது. Sports Officer, Accountant, Stenographer மற்றும் Upper Division Clerk பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த CASFOS கோவை ஆட்சேர்ப்புக்கு மொத்தம் 05 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த வேலைவாய்ப்பு செய்தி வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பித்து விடவும்.

CASFOS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் Directorate of Forest Education
விளம்பர எண் No.2-159/ Estt – I/ DFT – 2019/ 3613 – 3770
பணிகள் Sports Officer, Accountant, Stenographer & Upper Division Clerk
காலியிடங்கள் 05
பணியிடம் Central Academy for State Forest Service, கோயம்புத்தூர் (தமிழ்நாடு)
அறிவிப்பு வெளியான நாள் 19.01.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் வேலைவாய்ப்பு செய்தி வெளியான 60 நாட்களுக்குள்
அதிகாரப் பூர்வ இணையதளம் dfe.gov.in

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். ACRs/ APARs நகல்கள் இல்லாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதி முடிந்த பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்துக்கொள்ளப்படாது. இது போன்ற மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகளை எங்களது வலைதளத்தில் தெரிந்துக்கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான சில தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

CASFOS கோயம்புத்தூர் காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Sports Officer 01
Accountant 01
Stenographer (Grade-I) 01
Upper Division Clerk 02
மொத்த காலியிடங்கள் 05

CASFOS கோயம்புத்தூர் காலியிடங்களுக்கான தகுதிகள்:

தகுதிகள்:

  • Sports Officer பணிக்கு இணையான பதவி வகித்து, ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று உடற்கல்வியில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பக்கலாம் அல்லது உடற்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம்.
  • Upper Division Clerk, Stenographer Grade – I & Accountant பணிகளுக்கு இணையான பதவி வகித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 ஆண்டுகள்.

ஊதிய விவரம்:

  • Sports Officer: ரூ. 44900 – 142400/-
  • Accountant & Stenographer (Grade-I): ரூ. 35400 – 112400/-
  • Upper Division Clerk: ரூ. 25500 – 81100/-

CASFOS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • dfe.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் Vacancy circular 2020-21: Hindi/ English என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை நன்கு படித்து பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த இயக்குநகர முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes