TNHB வேலைவாய்ப்பு 2021, Driver & OA காலியிடங்கள்

TNHB வேலைவாய்ப்பு 2021 | ஓட்டுநர் & அலுவலக உதவியாளர் | மொத்தம் 15 காலியிடங்கள் | கடைசி தேதி: 28.02.2021

புதிய TNHB வேலைவாய்ப்பு 2021: Tamilnadu Housing Board (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்), தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த TNHB ஆட்சேர்ப்பு அறிவிப்பானது காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட உள்ளது. ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு மொத்தம் 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2021.

TNHB வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்
விளம்பர எண் ப.தொ.நு.அ. 5/ 126431/ 2020
பணிகள் ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 15
பணியிடம் தமிழ்நாடு
அறிவிப்பு வெளியான நாள் 21.02.2021
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 22.02.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் tnhb.tn.gov.in

நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான விவரங்கள் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது போன்ற தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனே தெரிந்துக்கொள்ள எங்களது வலைதளத்தை பின்பற்றுங்கள். விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே வழங்கபட்டுள்ளது.

TNHB காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Driver 05
Office Assistant 10
மொத்த காலியிடங்கள் 15

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் காலியிடங்களுக்கான தகுதிகள்:

தகுதிகள்:

  • ஓட்டுநர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் ஓட்டுவதில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். கனரக வாகன உரிமம் பெற்று அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • அலுவலக பணியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18ஆண்டுகள்.
  • SC, SC(A) & ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
  • MBC / DNC / BC & BC (M) பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆண்டுகள்.
  • பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு 10 ஆண்டுகள் அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல்

ஊதிய விவரம்:

  • ஓட்டுநர்: ரூ. 19500 – 62000/-
  • அலுவலக உதவியாளர்: ரூ. 15700 – 50000/-

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • tnhb.tn.gov.in என்ற TNHB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் Notifications என்பதை கிளிக் செய்து Direct recruitment for the posts of Driver and Office Assistant என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் 22.02.2021 அன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 28.02.2021.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
  • மேலும் விவரங்களுக்கு TNHB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes