மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021, Project Fellow காலியிடங்கள்

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 | Post Doctoral Fellow & Project Fellow | மொத்தம் 35 காலியிடங்கள் | கடைசி தேதி: 01.03.2021

புதிய மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021: University of Madras (சென்னை பல்கலைக்கழகம்), தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து RUSA 2.0 திட்டத்திற்கான தற்காலிக காலியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Post Doctoral Fellow மற்றும் Project Fellow பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு மொத்தம் 35 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தபால் அல்லது மின்னஞ்சல் வழியாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2021.

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் University of Madras
பணிகள்  Post Doctoral Fellow & Project Fellow
காலியிடங்கள் 35
பணியிடம் சென்னை
விண்ணப்பிக்க கடைசி நாள் 01.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் unom.ac.in

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப தபால் உறையின் மேல் எந்த பணிக்கான விண்ணப்பம் என்பதை எழுதி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் Curriculum Vitae, தேவையான சான்றிதழ்கள் மற்றும் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணிக்கான காலம் ஒரு ஆண்டு மட்டுமே மேலும் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் பணி காலம் அதிகரிக்கப்படும். இது போன்ற தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனே தெரிந்துக்கொள்ள எங்களது வலைதளத்தை பின்பற்றுங்கள். விண்ணப்பிக்க தேவையான தகவல்களை நாங்கள் வழங்கி உள்ளோம்.

சென்னை பல்கலைக்கழகம் காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Post Doctoral Fellow 06
Project Fellow 29
மொத்த காலியிடங்கள் 35

சென்னை பல்கலைக்கழகம் காலிப்பணியிட தகுதிகள்:

கல்வித் தகுதி:

  • Post Doctoral Fellow பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் Ph.D/ M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Fellow பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • Post Doctoral Fellow: ரூ. 55,000/-
  • Project Fellow: ரூ. 18,000/-

சென்னை பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் முகப்பு பக்கத்தில் Applications are invited for the Temporary Positions of Post Doctoral Fellow / Project Fellow எனத் தொடங்கும் அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுத்துள்ள கீழ்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் வழியாகவோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Chennai 600 005.
  • மின்னஞ்சல்: c3section.uom@gmail.com
  • விண்ணப்பங்களை கடைசி தேதி 01.03.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
  • மேலும் விவரங்களுக்கு சென்னை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes