இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021, OA & Driver காலியிடங்கள்

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021 | ஓட்டுநர் & அலுவலக உதவியாளர் | கால்நடை பராமரிப்புத்துறை | மொத்தம் 02 காலியிடங்கள் | கடைசி தேதி: 06.03.2021

புதிய இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021: இராணிப்பேட்டை மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை, தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு மொத்தம் 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.03.2021. விண்ணப்பதாரர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

நிறுவனம் இராணிப்பேட்டை மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை
பணிகள் ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 02
பணியிடம் இராணிப்பேட்டை (தமிழ்நாடு)
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.03.2021
அதிகாரப் பூர்வ இணையதளம் ranipet.nic.in

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு மாவட்ட அளவில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் நேர்முக அழைப்பு கடித படிவம் மற்றும் ரூ.5/- அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரர்களின் தற்போதைய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையை இணைத்து அனுப்ப வேண்டும். முழுமையான விவரங்களை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இது போன்ற தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனே தெரிந்துக்கொள்ள எங்களது வலைதளத்தை பின்பற்றுங்கள். விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

இராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத்துறை காலிப்பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் 01
ஓட்டுநர் 01
மொத்த காலியிடங்கள் 02

இராணிப்பேட்டை மாவட்ட காலிப்பணியிட தகுதிகள்:

கல்வி மற்றும் அனுபவம்:

  • எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • பொதுப்பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது 30 ஆண்டுகள்.
  • SC/ ST/ அருந்ததியர் பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது 35 ஆண்டுகள்.
  • BC/ MBC & BCM பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது 32 ஆண்டுகள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்முகத் தேர்வு

ஊதிய விவரம்:

  • ஓட்டுநர்: ரூ. 19,500 – 62,000/-
  • அலுவலக உதவியாளர்: ரூ. 15,700 – 50,000/-

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • ranipet.nic.in என்ற இராணிப்பேட்டை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் Notices>>Recruitment என்பதை கிளிக் செய்து Office Assistant and Driver Post Vacancies for Animal Husbandry Department from Ranipet District என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை நன்கு படித்து பூர்த்தி செய்யவும்.
  • உரிய சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • அஞ்சல் முகவரி: உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவமனை வளாகம், இராணிப்பேட்டை – 632 401.
  • விண்ணப்பத்தை கடைசி தேதி 06.03.2021 அன்றுக்குள் அனுப்பி வைக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்க>>>
  • மேலும் விவரங்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை படிக்கவும். இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தெரிந்துக்கொள்ள tamil.dailyrecruitment.in வலைதளத்தை பின்பற்றுங்கள்.

Leave a Comment

வேலைவாய்ப்பு Would you like to receive notifications on latest updates? No Yes